
Tamil GCSE Syllabus
Our well-structured curriculum aims to equip students with the necessary knowledge and skills to excel in Tamil language.
மாணவர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்க தேவையான அறிவும் மற்றும் திறன்களும் பெறுவதற்கு ஏற்றவாறு எங்கள் பாடத்திட்டம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Age-level learning
All the classes are focussed on both written and spoken Tamil covering grammar, vocabulary, literature, comprehension and interactive exercises guided by experienced and qualified teachers.
அனைத்து வகுப்புகளும் எழுதும் திறன் மற்றும் பேசும் திறன் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகின்றன; இலக்கணம், சொற்களஞ்சியம், இலக்கியம், புரிதல் மற்றும் தொடர்புடைய பயிற்சிகள் ஆகியவற்றை, அனுபவமிக்க தகுதி பெற்ற ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர் .
Cultural Events
We also incorporate interactive yearly cultural activities, and group events to instil our cultural belonging as well as enhance students' creativity with a sense of healthy competition and community spirit.
நமது தமிழ் பண்பாட்டு சார்ந்த உணர்வை ஊட்டுவதற்கும், மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கும், வருடாந்திர கலாசார நிகழ்ச்சிகளையும் குழு செயல்பாடுகளையும் நாங்கள் இணைத்துள்ளோம்; இதன் மூலம் ஆரோக்கியமான போட்டி உணர்வும் சமூகச் சிந்தனையும் உருவாகின்றன.
Welcome to
தளிர் தமிழ் கல்விக்கூடம்
Thalir Thamizh Kalvikoodam (TTK)
தளிர் தமிழ் கல்விக்கூடம் (TTK) என்பது Bexleyheath, Dartford, Sidcup மற்றும் Kent பகுதிகளில் வாழும் குழந்தைகள் தமிழ் மொழியை கற்றறிந்து, செழுமையான தமிழ்ப் பண்பாட்டை ஆழமாக அறிந்து கொள்ள ஊக்குவிக்கும் சிறப்பான இலாப-நோக்கமற்ற (non-profit) அமைப்பாகும்.
அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வலர்களும், உற்சாகமிக்க கல்வியாளர்களும் இணைந்து செயல்படும் TTK, குழந்தைகள் மொழித் திறன்களையும் பண்பாட்டு பார்வையையும் மேம்படுத்தி, ஒன்றோடொன்று இணைப்புகள் அதிகரித்து வரும் இன்றைய உலகில் அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக ஈடுபாடு என்ற கொள்கைகளை தழுவியுள்ள TTK, தமிழ் மொழியையும் பாரம்பரியத்தையும் எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாத்து அதை வளர்த்து எடுப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
Thalir Thamizh Kalvikoodam (TTK) is a remarkable non-profit organisation that plays a vital role in encouraging children living in Bexleyheath, Dartford, Sidcup and Kent to learn the Tamil language and delve into the rich Tamil culture.
With dedicated volunteers and passionate educators, TTK equips children with the language skills and cultural insight that will serve them well in an increasingly interconnected world. By embracing the principles of inclusivity and community engagement, TTK has become an indispensable asset in preserving and promoting the Tamil language and heritage for future generations.